Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

Advertiesment
ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

Mahendran

, திங்கள், 25 நவம்பர் 2024 (17:12 IST)
டாக்டர் ராமதாஸ் தினந்தோறும் வேலை இல்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார், அவரது அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தெரிவித்ததற்கு ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம். மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல்  வேலையில்லாமல்  இருந்து கொண்டு சொன்ன  கருத்துக்கள் தானா... ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... 
 
அதுவும், பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக்கொள்ள கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. 
 
மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும்  வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்... 
 
2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்... யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை.. 
 
இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!