Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு

கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு
, வியாழன், 26 ஜூலை 2018 (22:00 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி ஓய்வில் இருந்து வரும் நிலையில் நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் லேசான காய்ச்சல்தான் என்றும், அவரது உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலத்தை கண்காணித்து வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது தற்போதைய உடல்நிலை குறித்து கூறுகையில், 'திமுக தலைவர் கருணாநிதிக்கு, சிறுநீரக நோய் தொற்று காரணமாக காய்ச்சல் "ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வீட்டிலேயே 24 மணிநேரமும் மருத்துவ குழு, கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

webdunia
மேலும் கருணாநிதி உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுடன் நல்லுறவு? இம்ரான்கான் விருப்பம்!