Publish Date: Thu, 26 Jul 2018 (16:26 IST)
Updated Date: Thu, 26 Jul 2018 (16:30 IST)
சினிமா இயக்குனர் மணிரத்தினத்திற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
62 வயதை நெருங்கி விட்ட இயக்குனர் மணிரத்னம் இந்திய சினிமாவின் ஆளுமைகளில் முக்கியமானவர். தீவிரவாதம், மதம், காதல் தொடர்பாக அவர் படைத்த படைப்புகள் அவருக்கு பின்னால் வந்த சினிமா இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இவரின் படங்களுக்கு என ரசிகர் வட்டாரம் இருக்கிறது.
இவருக்கு அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன் இரண்டு முறை அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் திடீரெனெ இன்று மாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3வது முறையாக அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரை வைத்து அவர் இயக்கி வந்த செக்க சிவந்த வானம் திரைப்படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. எனவே, இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அவருக்கு சாதரண நெஞ்சு வலிதான். சிகிச்சை அளித்து வருகிறோம். இன்று மாலை அல்லது நாளை அவர் வீட்டிற்கு திரும்பி விடுவார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.