Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50 சதவிகித இட ஒதுக்கீடு: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் போராட்டம்

50 சதவிகித இட ஒதுக்கீடு: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் போராட்டம்
, சனி, 17 மார்ச் 2018 (14:37 IST)
தமிழ்நாட்டில் ஏற்கனவே பின்பற்றிய படி, அனைத்து அரசு சுகாதார நிலையங்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டபடிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மீண்டும் பெற வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து நூதன ஆர்பாட்டம்



தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய மாநில அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் முடிவின் படி, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் அருண் குமார், மாவட்ட பொருளாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாட்டில் ஏற்கனவே பின்பற்றியபடி, அனைத்து அரசு சுகாதார நிலையங்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பது.

மாநில அரசுக்கு கீழ் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தர வலியுறுத்துவது, தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

சுகாதாரத் துறையை தனியார் மயமாக்கும் நோக்கில் மத்திய அரசின் இந்த செயல்பாடு உள்ளதாக மருத்துவ சங்கத்தினர் குற்றச்சாட்டும் விடுத்தனர்.

கரூர் சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய கமல்