Publish Date: Sat, 10 Mar 2018 (16:31 IST)
Updated Date: Sat, 10 Mar 2018 (16:40 IST)
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி (அரசு காலனி)யில், விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
ஒரு நபருக்கு சுமார் 13 ஆயிரம் மதிப்பில், 181 நபர்களுக்கு சுமார் ரூ.23 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியினை துவக்கி வைத்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, அதே பகுதியை சார்ந்த பொதுமக்கள், அ.தி.மு.க விலேயே ஒரு சிலருக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்குவதாகவும், அமைச்சரின் உறவினர்களுக்கு மட்டுமே விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாகவும் கூறி விழா மேடையிலேயே அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அவரோ விளக்கம் ஏதும் கொடுக்காமல், அடுத்த முறை கொடுப்பதாக கூறி விட்டு இடத்தை விட்டு வெளியேறினார். மேலும், மாவட்ட திட்ட அதிகாரி கவிதாவினை பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்ட போது, அலட்சியமாக பதில அளித்த திட்ட அலுவலர் கவிதாவினை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.