காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள ஆக்கிரமிப்புகளை காணச் சென்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று பிரதமர் மோடியை பற்றி அநாகரீகமான முறையில் பேசியுள்ளார் ஸ்டாலின். அவருக்கு மனப்பிறழ்வுதான் எற்பட்டுள்ளது. மோடி ஒரு தேசிய தலைவரை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஸ்டாலினுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.