Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக செய்ய தவறியதை திமுக செய்யும் - மு.க.ஸ்டாலின் உறுதி!

Advertiesment
அதிமுக செய்ய தவறியதை திமுக செய்யும் - மு.க.ஸ்டாலின் உறுதி!
, திங்கள், 25 ஜனவரி 2021 (12:09 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் உறுதியளித்துள்ளார். 
 
அதில், மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் ஒரு உறுதியை தருகிறேன். உங்கள் பிரச்சினையே தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பதே வேலை என திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
மேலும், 30 நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதி மக்களையும் சந்திக்கிறேன். அங்குள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் எனக்கு கோரிக்கை மனுக்களை தரலாம். அத்துடன் வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். 
 
உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு, நான் மட்டுமே பொறுப்பு என கூறியுள்ள அவர்,  மக்களின் கோரிக்கைகளை தீர்க்க அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும் என்றார். மக்கள் தங்கள் குறைகளை 91710 91710 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் www.stalinani.com என்ற இணையதளம் வழியாகவும் மக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம் என்றார். இந்த புது முயற்சியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்ய தவறியதை திமுக செய்யும் என்று அவர் உறுதியளித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்