பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில், திமுகவினர் இந்தி பெயரை அழித்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் தான் கல்விக்கான நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு கூறியதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், இந்தி திணிப்புக்கு எதிராக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், இந்தியில் எழுதப்பட்டிருந்த "பொள்ளாச்சி" என்ற வார்த்தையின் மீது கருப்பு சாயம் பூசி, போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது, ஒரே ஒரு காவல் அதிகாரி மட்டுமே ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் இருந்ததால், அவரால் இதை தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சில கட்சிகள் இந்தி மொழியை எதிர்த்தும், பெரும்பாலான கட்சிகள் அதற்கு கண்டனம் தெரிவித்தும் வரும் நிலையில், திமுக மிகவும் தீவிரமாக களத்தில் இறங்கி போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.