Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக ஊடகங்கள் மீது திடீரென பாய்ந்த முரசொலி: அதிருப்தியில் ஊடகவியலார்கள்

தமிழக ஊடகங்கள் மீது திடீரென பாய்ந்த முரசொலி: அதிருப்தியில் ஊடகவியலார்கள்
, செவ்வாய், 23 ஜூலை 2019 (07:46 IST)
தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த மக்களவைத் தேர்தலின் போது கூட பாஜகவுக்கு எதிராகவும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் பெரும்பாலான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள்தால் தான் திமுக கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திடீரென ஊடகங்கள் மீது திமுக பாய்ந்துள்ளது. ஊடகங்களின் நிலை குறித்து முரசொலியில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது. இந்த தலையங்கம் ஊடகவியலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது 
முரசொலியில் இன்றைய தலையங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூலை 20-ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்க போர் பிரகடனத்தை போல் அமைந்திருந்தது என்றும் , வழக்கம் போல் தமிழ் நாட்டு ஊடகங்களை இந்த உரையின் அருமையை புரிந்து கொள்ளவில்லை என்றும் முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஸ்டாலின் உரையின் அருமை புரியவில்லையா அல்லது அடிமைத்தனத்தில் உச்சமாக அதிகார வர்க்கத்தின் மிரட்டல்கள் கண்ணை மறைத்து விட்டதா என தெரியவில்லை என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
முரசொலியில் மு க ஸ்டாலின் அன்று பேசிய உரையில் கிட்டத்தட்ட திமுகவின் கொள்கைகளை மட்டுமே இருந்தன. திமுக வழக்கமாக வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதன் கொள்கைகள் இருந்த அந்த பேச்சில் ஒரே இனம், ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே ரேஷன், ஒரே மின்சாரம் , ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படும் என்று மு க ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இவை அனைத்தும் திமுகவின் கொள்கைகளே தவிர தமிழக மக்களின் கொள்கையா? என்பது விவாதத்துக்குரியது
 
webdunia
அண்ணா குரல் கொடுத்த மாநில சுயாட்சி போற்றப் படவில்லை என்றும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் தமிழக மக்களின் கருத்துக்களா? என்பது கேள்விக்குறியே. இவ்வாறு திமுகவின் சொந்த கொள்கைகளை மு க ஸ்டாலின் பேசிய நிலையில் அந்தப் பேச்சை ஊடகங்கள் வெளியிடவில்லை என்று முரசொலி குறிப்பிட்டிருப்பது ஊடகவியலாளர்களின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் குடும்பம்!