Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டு மாணவர்களுடன் போட்டியிடலாம் - புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழிசை பெருமிதம் !

Advertiesment
வெளிநாட்டு மாணவர்களுடன் போட்டியிடலாம் - புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழிசை பெருமிதம் !
, புதன், 24 ஜூலை 2019 (16:40 IST)
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன்  பதவியேற்றது முதலாகவே அக்கட்சி ஊடக வெளிச்சம் பெற்று மக்களிடமும் நல்ல பரிட்சயம் ஆகிவருகிறது.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தமிழிசை.
 
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ;
 
மக்களவைத் தேர்தலில்  பாஜக வெற்றி பெற்று, மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் 50 நாட்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் ஸ்டாலினால் முன்மொழியப்பட்ட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் லண்டனில் ஒளிந்துள்ளார்.
 
மேலும் உலக அளவில் கல்வியில் உள்ள சவால்களை சந்திக்கவும் மாணவர்களுக்கு தரமான கல்விக்கொள்கை தேவை என்பதற்கேற்ப புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அதை அமல்படுத்துவதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காகவே இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இப்புதிய கல்விக்கொள்கையில் கருத்து தெரிவிக்க வேண்டியது மாணவர்களும், ஆசிரியர்களும்தான் அரசியல் கட்சியினர் இதில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இக்கல்விக் கல்விக்கொள்கையால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் போட்டிபோடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிந்து விழுந்த குடலை தாங்கிக் கொண்டு 10 கி.மீ நடந்த மனிதர் – உயிர் பிழைத்த ஆச்சர்யம்