நேற்று திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியனாதும் கோபப்பட்ட தினகரன் அதிமுகவை கண்டிக்காமல் திமுக இடைத்தேர்தல் விவகாரத்தில் கூட்டு சேர்ந்துள்ளது. திமுக தேர்தலுக்கு அஞ்சுவதால்தான் இப்படி செய்கிறது என விமர்சித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முரசொலி பேஸ்புக் பக்கத்தில் டிடிவி தினகரனி லெஃப்ட் ரைட் வாங்கி பெரிய கட்டுரை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த பலவற்றில் சில உங்களது கவனத்திற்கு...
மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட விவாதிக் கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் கூட விவாதிக்க முடியாது என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். இதில் டி.டி.வி. தினகரன் இரண்டாவது ரகம்!
சித்தி, சிறையில் இருக்கிறார். தம்பி சிறையில் இருக்கிறார். அத்தை சிறையில் இருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டு சிறையில் அல்ல. வெளி மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்துக்கான காவிரி உரிமையை மீட்பதற்காக கர்நாடகா சென்று கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படவில்லை அவர்கள். ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்து சசிகலா குடும்பம் சுரண்டிக் கொழுத்தது சட்ட பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில்தான் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இதில் மயிரிழையில் தப்பியவர் டி.டி.வி. தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 20 ரூபாய் நோட்டையே டோக்கனாகக் கொடுத்தார் தினகரன் என்றும், இந்த டோக்கன் வாங்கியவர்களுக்கு பின்னர் பணம் வந்து சேரவில்லை என்றும், தினகரன் தொகுதிக்குள் வந்தபோது 20 ரூபாய் நோட்டோடு பெண்கள் வந்ததும், இன்னும் சிலர் தினகரன் வீட்டை நோக்கியே வந்ததும், அதனாலேயே ஆர்.கே.நகருக்கு வராமலேயே தினகரன் தவிர்ப்பதும் ஊர் அறிந்த ரகசியங்கள்.
இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 420-ன்படி பல்வேறு மோசடிகளில் சிக்கி - இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120 (1) பிரிவின்படி பல்வேறு குற்றவியல் சதிகளைச் செய்து - ஆர்.கே. நகர் தொகுதி மக்களை 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய டி.டி.வி. தினகரன் சொல்கிறார், "தேர்தலைப் பார்த்து தி.மு.க. பயப் படுகிறது' என்று.
கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன சில்லறைகளுக்கு சிகரங்களைப் பற்றி என்ன தெரியும்? நீயே அயிரை மீன். உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை? என இந்த பதிவு முடிகிறது.