Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Siva
திங்கள், 14 ஏப்ரல் 2025 (19:18 IST)
சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக பிரமுகர் அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: 
 
காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
 
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு 
முக ஸ்டாலின்?

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்