திமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நிதி ஒதுக்கணும்: ஸ்டாலின் பரபர ஆர்டர்!!

வியாழன், 26 மார்ச் 2020 (15:17 IST)
கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் திமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தொகுதி நிதி ஒதுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 
 
தற்போது இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் திமுக எ.பி, எம்.எல்.ஏ-க்கள் முகக்கவசங்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு தங்களது நாடாளுமன்ற அல்ல சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 
 
ஏற்கனவே, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவ கருவிகள் வாங்க எம்பி அன்புமணி ராமதாஸ் ரூ.3 கோடி வழங்க முன்வந்துள்ளார். அதாவது தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்க தயராக உள்ளதாகவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ப்ளான் பண்ணாம அறிவிச்சா இப்படித்தான்! – காட்டமாக விமர்சித்த கஸ்தூரி!