Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ளான் பண்ணாம அறிவிச்சா இப்படித்தான்! – காட்டமாக விமர்சித்த கஸ்தூரி!

ப்ளான் பண்ணாம அறிவிச்சா இப்படித்தான்! – காட்டமாக விமர்சித்த கஸ்தூரி!
, வியாழன், 26 மார்ச் 2020 (15:11 IST)
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மக்களுக்கு அவசிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதால் மக்களுக்கு தேவையான நிவாரண உதவி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் மக்கள் நிவாரண உதவிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு இலவச கேஸ் மூன்று மாதங்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி “திட்டமிடப்படாத அறிவிப்புகளுக்கு இது ஒரு உதாரணம். இலவசமோ இல்லையோ அனைத்து குடும்பத்திற்கும் மாதம் ஒரு சிலிண்டர் ஒதுக்கீடு செய்திருக்கலாம். ஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர்களை பதிவு செய்தால் உரிய நேரத்தில் அளிக்காமல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

உஜ்வாலா பயனாளர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் அளிப்பதால் அந்த திட்டத்தில் இல்லாமல் உள்ள சாதாரண பயனாளர்களுக்கு கேஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற ரீதியில் கஸ்தூரி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 15,000-க்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் - நிர்மலா சீதாராமன்