சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சினிமா, சமூக ஆர்வலர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், செல்வந்தர்கள் தொடர்ந்து தங்கள் நிதி உதவி ,நிவாரணம் மற்றும் சமையல் பொருட்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீராங்கணை பி.வி. சிந்து தெலங்கானா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் அளித்துள்ளார்.