Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸிடம் கூட்டணிக்கு கெஞ்சுகிறதா திமுக?!.. நடப்பது என்ன?...

Advertiesment
stalin rahul

BALA

, திங்கள், 2 பிப்ரவரி 2026 (16:07 IST)
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது.. ஆனால் 1967-ல் திமுக காங்கிரஸை தோல்வியடைய செய்து ஆட்சிக்கு வந்தபின் காங்கிரஸ் இதுவரை தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை.. அதே நேரம் கடந்த பல தேர்தலாக திமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது..

ஒருபக்கம் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திமுக பங்கு கொடுப்பதில்லை.. அதாவது காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது கிடையாது.. இந்நிலையில்தான், எங்களுக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல், கோரிக்கை, விவாதங்கள் காங்கிரஸில் தற்போது எழுந்திருக்கிறது.. இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது..

மாணிக் தாகூர் எம்பி, காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் இந்த கருத்தை வலியுறுத்தினார்கள்.. அதேநேரம் சமீபத்தில் டெல்லி சென்ற கனிமொழி எம்பி காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து இது பற்றி ஆலோசனை செய்தர். அப்போது காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று.. அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என ராகுல்காந்தியை அவர் கன்வின்ஸ் செய்ததாக செய்திகள் வெளியானது..

அப்படியிருந்தும் இதுவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை.. கனிமொழியை வைத்து காங்கிரஸ் கூட்டணியை  உறுதி செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார். ஏனெனில் காங்கிரஸ் எக்காரணத்தைக் கொண்டும் விஜயின் தவெக பக்கம் சென்று விடக்கூடாது என திமுக நினைக்கிறது.

ஒருபக்கம் ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.. காங்கிரசை நம்பி திமுக இல்லை.. திமுகவை நம்பிதான் காங்கிரஸ் இருக்கிறது.. காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் மற்ற கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தலை சந்திக்கும். திமுகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் அது காங்கிரசுக்குதான் நஷ்டம்’ என்று திமுகவினர் சொல்லி வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்!..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் பள்ளி கட்டண விவகாரம்: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிம்மதி!