திமுக பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
86 வயதான துரைமுருகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சளி, காய்ச்சலால் அவதிப்பட்ட துரைமுருகனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின் குணமாகி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.