வரும் ஜூன் மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுக சார்பில் நான்கு எம்பிக்கள் வரை தேர்வு செய்யப்படலாம். அதிமுகவுக்கு, பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே இரண்டு எம்பிகளை தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 ஓட்டுகள் தேவை. இந்த நிலையில், எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக சார்பில் நான்கு எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் உட்பட மூன்று பேர் மீண்டும் பதவி கேட்பதாகவும், மேலும் 2 பேர் பதவி கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, கமல்ஹாசனுக்கு ஒரு எம்பி பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்து தான் சட்டமன்ற தேர்தலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனவே, அவருக்கும் ஒரு எம்பி பதவி வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், வைகோவுக்கு மீண்டும் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வைகோவுக்கு பதிலாக கமல்ஹாசன் தேர்வு செய்யப்படுவார் என்ற கூற்றும் பரவியுள்ளது.
இந்த நிலையில், இன்னும் சில வாரங்களில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதில், கமல்ஹாசன் பெயர் கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.