தேசிய மக்கள் பதிவேட்டிற்கு எதிராக காந்தி பாணியில் அகிம்சை வழியில் போராட இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள். அதை வெற்றிகரமாக முடித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டை எதிர்த்து காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.