Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்ப்பனர்கள் நாய்களா? திமுக மறந்ததை மண்டையில் குட்டி சொன்ன பாஜக!!

Advertiesment
பார்ப்பனர்கள் நாய்களா? திமுக மறந்ததை மண்டையில் குட்டி சொன்ன பாஜக!!
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (16:57 IST)
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் அநாகரீக பேச்சுக்கு பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். 
 
நாராயணன் திருப்பதி தனது சமூக வலைத்தளப்பக்கமான பேஸ்புக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது, 
 
பார்ப்பனர்களை 'நாய்கள்' என்று பேசியிருக்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அவரின் கவனத்திற்கு...
 
1967 ஆம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டு தான் வெற்றி பெற முடிந்தது திமுகவால் என்பதை மறந்து விட வேண்டாம்.
 
1971 ஆம் ஆண்டு 'காஷ்மீரத்து பாப்பாத்தி' என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் திமுக ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்து விட்டதா திமுக?
 
1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம்ஜிஆர் என்ற இரு பார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, திமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?
 
1996 ஆம் ஆண்டு 'சோ' என்ற பார்ப்பனரின் முயற்சியால் தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று திமுக வெற்றி பெற்றது என்பதை மறைக்க முடியுமா?
 
2006 ஆம் ஆண்டு நான் 'பூணூல் அணிந்த பார்ப்பனன்' என்று தன்னை அழைத்து கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற மைனாரிட்டி ஆட்சியை திமுகவால் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியுமா?
 
மேலும்,1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில் தான் திமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறு படைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.
 
பதவி சுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த 'பார்ப்பனர்களை' நாய்கள் என்று அழைக்கிறீர்களே திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும்? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்? தவறு செய்து விட்டீர்கள் ஆர் எஸ் பாரதி அவர்களே, தவறு செய்து விட்டீர்கள்! என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரூப் 2 தேர்வில் முறைகேடு என புகார்...