Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமே No விசில்!. தூய்மை பணியாளர்களிடமிருந்து விசிலை பிடுங்கும் திமுக கவுன்சிலர்கள்!...

Advertiesment
whistle

Mahendran

, செவ்வாய், 10 பிப்ரவரி 2026 (19:27 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிலும் முதல்வர் ஸ்டாலினை ‘சி.எம் அங்கிள்’ என்று அவர் சொன்னது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் ‘திமுக ஒரு தீய சக்தி’ என மிகவும் கடுமையாக விமர்சித்தார். சில நேரங்களில் மிகவும் நக்கலாகவும் அவர் திமுகவை பேசி வருகிறார். இது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதால் சமூக வலைத்தளங்களில் விஜயை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

ஒருபக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறது. இந்த சின்னம்  தவெகவுக்கு பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. ஏனெனில் விசில் ஊதியே பிரச்சாரம் செய்ய முடியும்.. மேலும் ‘விசில் போடு’ என்கிற வாசகத்தை பிரச்சார வாசகமாகவும் பயன்படுத்த முடியும்.. எனவே மகிழ்ச்சியில் இருக்கிறது தவெக.
webdunia


ஒருபக்கம் எங்கெல்லாம் விசில் இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த விசிலை ஊதாமல் தடுக்கும் வேலைகளிலும் திமுகவினர் இறங்கியுள்ளனர். இந்நிலையில்தான், சிவகங்கையில் தனது பகுதியில் தூய்மை பணியாளர் விசில் ஊதக்கூடாது என அறிவுறுத்திய திமுக கவுன்சிலர் ஆயுப் கான் விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.. மேலும் தூய்மை பணியாளிடமிருந்து அந்த விசிலை புடுங்கி அதனை குப்பை சேகரிக்கும் வண்டியிலும்போட்டு விட்டார்..

இப்படி தமிழகத்தின் பல ஊர்களிலும் நடந்து வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது. தூய்மை பணியாளர்கள் விசில் ஊதினால் கூட அது தவெகவை ஆதரிப்பது போல என திமுக கவுன்சிலர்கள் கருதுகிறார்கள். அது தவெகவுக்கு காசு இல்லாமல் விளம்பரம் செய்வது போது ஆகிவிடும் என அவர்கள் நினைக்கிறார்கள்.. இந்த செய்தியை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெகவை பார்த்து டெல்லி பயப்படுகிறது!. தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...