Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாமகவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றதா அதிமுக?

Advertiesment
பாமகவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றதா அதிமுக?
, செவ்வாய், 15 அக்டோபர் 2019 (07:25 IST)
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இரு தொகுதிகளிலும் உச்ச கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது 
 
குறிப்பாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களும், திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களூம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் விக்ரவாண்டி தொகுதி வன்னியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் அவர்களுக்கான சலுகை அறிவிப்புகளை திமுக தலைவர் முக ஸ்டாலின் வாரி வழங்கி வருகிறார். இதனால் பதட்டமடைந்த பாமக, வன்னியர் வாக்கு வங்கி திமுகவுக்கு மாறி விடுமோ என்று பயந்து, அதிமுக வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது 
 
webdunia
மேலும் திமுக தலைவரின் அறிவிப்புக்குப் அவ்வப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுத்திருக்கிறார். திமுக - பாமகவின் இந்த மோதலை ரகசியமாக ரசித்து வரும் அதிமுக, பாமக எப்படியும் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன?