Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 30 March 2025
webdunia

”தமிழை ஆட்சி மொழி ஆக்குங்கள்”.. வைரமுத்து கோரிக்கை

Advertiesment
”தமிழை ஆட்சி மொழி ஆக்குங்கள்”.. வைரமுத்து கோரிக்கை

Arun Prasath

, திங்கள், 14 அக்டோபர் 2019 (13:47 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த கவிஞர் வைரமுத்து, தமிழை ஆட்சி மொழியாக்குங்கள் என நிரூபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில் கீழடி அகழ்வாயில் கிடைத்த மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, ஆகியவை தமிழர்களின் பண்டைய நாகரீகத்திற்கான சான்றுகளாக கருதப்பட்டது. மேலும் ஹராப்பா, மொகஞ்சதாரோ நாகரீகங்களை போலவே கீழடி தமிழர்களின் நாகரீகத்தை பறைசாற்றுகிறது என பல தமிழரிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் கூறிவந்தனர்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து, ”3,500 ஆண்டுகள் முன்பே எழுத்தறிவு பெற்றவன் தமிழன், சிந்து சமவெளிக்கும் முந்தைய சமவெளி கீழடி, இதில் அரசியல் செய்யாதீர்கள்” என கூறினார். தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த கவிஞர் வைரமுத்து, பின்பு நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், ”தமிழர்கள் விரும்புவது சொற்களை விட செயல்களைத் தான், ஆகையால் தமிழை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்” என கூறியுள்ளார். முன்னதாக மோடி ஐ.நா.வில் தமிழில் பேசியது குறித்து, அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “உலக அரங்கில் தமிழில் பேசும் மோடி, தமிழகத்தில் இந்தியை திணிப்பது ஏன்? என்றும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கலாமே எனவும் கூறினார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும், தமிழை ஆட்சி மொழி ஆக்கவேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் வீட்டுக்குப் போலிஸ் பாதுகாப்பு – உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் தொண்டர்கள் !