திமுக-காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு தாமதம் ஏன்?

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (19:18 IST)
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இணைந்துவிட்ட நிலையில் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு காங்கிரஸ் தலைவர்கள் முன் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
 
ஆனால் சென்னை நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர், அவர்கள் திமுக தருவதாக கூறியுள்ள தொகுதிகள் குறித்து இறுதி ஆலோசனை செய்து வருவதாகவும், இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
திமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இல்லாததால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் கூட்டணி குறித்த அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இருப்பினும்  இன்னும் சிறிது நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அண்ணா அறிவாலயம் முன் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments