Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாமக வந்ததால் தேமுதிகவுக்கு சீட் குறைப்பா ? – கண்டுகொள்ளாத பாஜக ?

பாமக வந்ததால் தேமுதிகவுக்கு சீட் குறைப்பா ? – கண்டுகொள்ளாத பாஜக ?
, புதன், 20 பிப்ரவரி 2019 (15:50 IST)
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால் தேமுதிக வுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

பாமக தனது தேர்தல் கூட்டணிக்காக நேற்று அதிமுக அணியில் இணைந்தது. ஆனாலும் அதற்கு முன்னர் திமுகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சிலக் காரணங்களால் திமுக கூட்டணியில் பாமக இணையமுடியாமல் போனது. அதற்கு முக்கியக் காரணமாக திமுகக் கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் பாமக இருக்கும் கூட்டணியில் தங்களால் இருக்க முடியாது என அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாமக இந்த குழப்பத்தால் தேமுதிக வை கூட்டணிக்குள் இழுக்கவும் அவர்கள் கேட்கும் சீட்டுகளைக் கொடுக்கவும் தயாராகியிருந்தன அதிமுக வும் பாஜகவும். ஆனால் நேற்று திடீரென்று பாமக நேற்று காலை அதிமுக கூட்டணியில் இணைந்து 7 சீட்களைப் பெற்றது. அதன் பின் மதியம் பாஜக தங்களுக்காக 5 சீட்களை வாங்கி டீலை முடித்தது.

இந்த இரண்டுக் கட்சிகளுக்கே 12 சீட்களைக் கொடுத்து விட்டதால், இப்போது தேமுதிக வுக்குப் போதுமான சீட்களை ஒதுக்க முடியாது என நினைக்கிறதாம் அதிமுக. இது சம்மந்தமாக தங்களுக்கு உதவும் என்று எதிர்பார்த்த பாஜகவும் இப்போது கையை விரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அதிமுக கொடுக்கும் சீட்களை வாங்கிக்கொள்வதா அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா என்ற யோசனையில் உள்ளது தேமுதிக தலைமை.

வடமாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவே 7 தொகுதிகள் வாங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி வைத்துள்ள நாம் அவர்களை விட அதிக தொகுதிகள்  வாங்க வேண்டும் என்ற குரல்களும் தேமுதிக வில் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதனால் கூட்டணி குறித்த சலசலப்புகள் தேமுதிக அதிமுக இடையே எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக-காங்கிரஸ் கூட்டணி இயற்கையானதா? காலத்தின் கட்டாயமா?