Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குப்பைக்கூடையால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட சிக்கல்: தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

குப்பைக்கூடையால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட சிக்கல்: தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
, திங்கள், 18 மார்ச் 2019 (22:25 IST)
விஜய்காந்தின் தேமுதிக கட்சியின் சின்னம் முரசுதான். இந்த முரசு சின்னம்தான் அக்கட்சிக்கு முதல் தேர்தலில் பத்து சதவிகித வாக்குகளை பெற்று தந்தது.  ஆனால் நாளடைவில் அந்த சின்னமே அக்கட்சிக்கு பிரச்சனையாக மாறியது. ஏனெனில் முரசு போலவே இருக்கும் சுயேட்சைகளின் சின்னங்களில் ஒன்றாகிய குப்பைக்கூடை என்ற சின்னத்திற்கு பலர், முரசு என்று நினைத்து வாக்களித்துவிட்டனர். இதனால் குப்பைக்கூடை சின்னத்தில் போட்டியிட்ட பலர் நமக்கு இவ்வளவு வாக்குகளா? என்று ஆச்சரியம் அடைந்தனர். 
 
இதனால் சுதாரித்து கொண்ட தேமுதிக, இம்முறை குப்பைக்கூடை சின்னத்தை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும், அந்த சின்னத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது இதுகுறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே பிரேமலதாவின் ஒரே ஒரு பேட்டியால் மக்களிடம் படுமோசமான பெயரை பெற்றுள்ள தேமுதிக, நான்கில் ஒன்றாவது ஜெயிக்க வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள நிலையில் அதையும் இந்த குப்பைக்கூடை சின்னம் கெடுத்துவிடும்போல் தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற தேர்தல் 2019: யாருக்கு யாருடன் போட்டி??