Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்குறிச்சித் தொகுதியால் அதிமுக கூட்டணியில் சிக்கல் – வெல்வது யார் ?

கள்ளக்குறிச்சித் தொகுதியால் அதிமுக கூட்டணியில் சிக்கல் – வெல்வது யார் ?
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (08:42 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள  அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகளும் கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்பதால் கூட்டணியில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரியக் கட்சிகளில் கடைசியாக கூட்டணியை உறுதி செய்தது தேமுதிக தான். மற்றக் கட்சிகள் எல்லாம் கூட்டணியில் இடம்பிடித்து தங்களுக்கு வேண்டிய இடங்களைப் பெற்றபோது தேமுதிக மட்டும் அதிமுகவா அல்லது திமுகவா எனக் குழம்பிக்கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுக் கட்சிகளோடும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்களின் ஒட்டுமொத்த பிம்பமும் டேமேஜ் ஆனது. இதுகுறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆகியோரின் குற்றச்சாட்டுகள் நேற்று முழுவதும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பின.

அதுவரை தேமுதிகவைக் கூட்டணிக்குள் இழௌக்க தீவிரம் காட்டிய  அதிமுக , இனி தேமுதிக நமக்குத் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்தது. அதையடுத்து திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தேமுதிக வினரால் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது, அதிமுக அமைச்சர்களை விமர்சனம் செய்தது என அவரும் தன் பங்கிற்கு சொதப்பினார். மேலும் விஜயகாந்த் உடல்நலம் இல்லாத போது அவரைப் பொம்மைப்போல வைத்து சுதீஷும் பிரேமலதாவும் தவறான அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
webdunia

இது போன்ற எதிர்மறை சம்பவங்களால் தேமுதிக இறங்கிவர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளில் 4 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தது. ஆனாலும் கூட்டணிக்குள் இன்னமும் முழு இணக்கமான சூழ்நிலை உருவானதாகத் தெரியவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக தேமுதிக, தாங்கள் கேட்ட அளவிற்கு தொகுதிகள்தான் தரவில்லை குறைந்தபட்சம் நாங்கள் கேட்கும் தொகுதிகளையாவது பெறவேண்டும் என எதிர்பார்க்கிறது.

கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவிற்கு அதிகளவு வாக்குவங்கி உள்ள தொகுதியாக உள்ளது. அதேப் போல வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகமாக உள்ளத் தொகுதியும் கூட. அதனால் பாமக கண்டிப்பாக கள்ளக்குறிச்சி வேண்டும் எனக் கூறுகிறதாம். அதேப் போல அதிமுக அமைச்சர் சண்முகமும் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் மூன்று கட்சிகளும் விடாப்பிடியாக இருப்பதால் கள்ளக்குறிச்சியை யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளது அதிமுக தலைமை. அதையடுத்து நேற்று முதல்வர் நேராக விஜயகாந்த் வீட்டிற்கு சென்று இது குறித்து பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் பெரும்பாலும் கள்ளக்குறிச்சி தொகுதி பெரும்பாலும் தேமுதிக விற்கே செல்வதற்காவ்ன வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி சம்பவ எதிரொலி – துப்பாக்கிக் கேட்கும் இளம்பெண்கள் !