Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்... ஸ்பீடு பிரேக்கர் போட்டு தேமுதிகவை டொக்காக்கிய அதிமுக

Advertiesment
எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்... ஸ்பீடு பிரேக்கர் போட்டு தேமுதிகவை டொக்காக்கிய அதிமுக
, திங்கள், 18 நவம்பர் 2019 (18:30 IST)
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக 3 மேயர் பதவிகளை கேட்பதாவும், அதற்கு அதிமுக இப்போதே முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவ்ம் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். 
 
அந்த வகையில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள்  விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன. தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எல்.கே.சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
webdunia
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை போல அல்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு தேவையான தொகுதியை ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
தேமுதிகவை பொறுத்தவரை திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் என மூன்று மாநகராட்சிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அதிமுக தலைமையிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் தேமுதிக கேட்கும் மாநகாட்சிகளை கொடுப்பதற்கு அதிமுக தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
எனவே இந்த தொகுதி பங்கீடு அதிமுக முடிவு எடுப்பதை பொருத்தே உள்ளது என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’குட்டி யானையை’ தலையில் தூக்கிக் கொண்டு ஓடும் நபர் ! வைரல் வீடியோ