Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவைத் தேர்தலில் ஏமாந்துட்டோம்…. ஆனா உள்ளாட்சி தேர்தல்ல ? – அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக !

Advertiesment
மக்களவைத் தேர்தலில் ஏமாந்துட்டோம்…. ஆனா உள்ளாட்சி தேர்தல்ல ? – அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக !
, திங்கள், 18 நவம்பர் 2019 (12:23 IST)
மக்களவைத் தேர்தலை போல அல்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கால் பங்கு சீட்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்ற தேமுதிக கம்மியான சீட்களை வாங்கி போட்டியிட்டது. அது அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி விஜயகாந்த் கட்டுப்பாட்டை விட்டு அவரது மனைவி மற்றும் மைத்துனர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதுபோல ஏமாறக்கூடாது என்பதற்காக இப்போதே தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தேர்தல் சீட்களில் 25 சதவீதத்தை கேட்டுள்ளதாகவும் அதைக்கேட்டு அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள் இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முடிவெடுப்பார் என சொல்லி இப்போதைக்கு பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளனர். அவர்கள் சார்பில் 10 சதவீத இடத்துக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..