தற்போது ப்ரதீப் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படங்களில் LIK செப்டம்பர் மாதத்திலும் ட்யூட் தீபாவளிக்கும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த ரிலீஸ் திட்டங்களில் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ட்யூட் படம் தீபாவளி ரிலீஸில் இருந்து பின் வாங்கலாம் என்றும் அந்த தேதியில் LIK ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஏனென்றால் ட்யூட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திடம் விற்பனை ஆகியுள்ளது. அதே நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் தீபாவளிக்கு ரிலீஸாகும் பைசன் திரைப்படத்தையும் வாங்கியுள்ளது. அதனால் எதாவது ஒரு படத்தை தீபாவளி ரிலீஸில் இருந்து தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.