Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருமான வரி சோதனை ; விசாரணைக்கு பின் திவாகரன் கைது?

Advertiesment
வருமான வரி சோதனை ; விசாரணைக்கு பின் திவாகரன் கைது?
, வியாழன், 9 நவம்பர் 2017 (13:58 IST)
வருமான வரி சோதனைக்கு பின் சசிகலாவின் சகோதரர் திவாகரனை கைது செய்யப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.


 

 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
 
அதேபோல், சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கலைக் கல்லூரியிலும் அதிகாரிகள் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். சுந்தரக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இதையடுத்து, திவாகரனின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டிற்கு முன்பு திரண்டுள்ளனர். அதன் பின் திவாகரனை அதிகாரிகள்  மன்னார்குடி அழைத்து சென்றனர். 
 
திவாகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவே அவர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதன் பின் மீண்டும் சுந்தரக்கோட்டைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகம்