கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் நவம்பர் 7ஆம் தேதி அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக மாநாடு நடைப்பெற்றது.
இந்த இரு நாடுகளிடையே வர்த்தகம் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசியவர்கள் கூறியதாவது:-
அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக சாத்தியம் மிக சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகும். இந்த மாநாட்டு மூலம் வணிக, அரசு மற்றும் கல்வியில் இருந்து பங்குதாரர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையாகவே மிகவும் செல்வாக்குள்ள கூட்டாளர்கள்.
இருநாடுகளின் கூட்டு வர்த்தகத்தால், சுமார் 4 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவை தங்கள் தாயகமாக கொண்டுள்ளனர். 1,66,000 இந்திய மக்கள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
இன்னும் புதிய பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்த முயற்சித்து வருகிறோம். கடந்த மாதம் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் இருதரப்பு வர்த்தகத்திற்கு மேலும் 2 பில்லியன் டாலர் வருவாய் ஏற்பட்டுள்ளது.
எங்கள் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார கூட்டணியை சம பலத்தை தரும் என நம்புகிறோம். இந்தோ பசபிக் பகுதியில் இந்தியா, இருநாடுகளின் கூட்டு வர்த்தகத்தை முக்கிய வழியில் ஊக்குவிக்க கவனம் செலுத்த வேண்டும். இது அமெரிக்க ஜியோஸ்டிரேட்டிக் தலைமையை ஒருபடி மேல கையாள மீண்டும் உதவும்.
ஐடி துறையில் இருநாடுகளின் கூட்டு ஒப்பந்தம் பல துறைகளுக்கு பயனளிக்கும். சுங்க வரி மற்றும் ஒழுங்குமுறை ஒத்திசைவு பற்றிய பிரச்சனை குறித்து ஆராய்ந்து பேசுவது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்திற்கும் பயனளிக்கும்.
ஐடி, இ-காமர்ஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய துறைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்க சந்தையில் முக்கியத்துவம் கொடுப்பது, வர்த்தம் மட்டுமல்லாமல் பாதுகாப்பு துறை, பாதுகாப்பு உட்புறம், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகிய கிளைகளை பிரமிக்கதக்க ஒன்றாக மாற்ற பெரிதும் உதவும்.