திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்ஸிட்  சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரபல திரைப்பட இயக்குனர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
	 
 
									
										
								
																	
	
	 
	திரைப்பட இயக்குனரும் சமூக ஆர்வலருமான கரு. பழனியப்பன் பொது நிகழ்ச்சிகளில் தீவிரமான அரசியல் கருத்துகளை எடுத்துவைப்பவர். இவர் தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக அதிரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும். சு.வெங்கடேசனுக்கு என்பவருக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'கலைஞர்களின் சங்கமம்' என்ற கூட்டம் நடைபெற்றது. 
 
									
										
			        							
								
																	
	 
	மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ரோகிணி, இயக்குநர் கரு. பழனியப்பன், இயக்குநர் ராஜூமுருகன்,இயக்குநர் கோபி நயினார், இயக்குநர் லெனின் பாரதி, மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
									
										
										
								
																	
	அப்போது ஆளும் அதிமுக ஆட்சியின் அவலங்களையும், பாஜகவையும் கடுமையாக சுட்டிக்காட்டி கிண்டலாக பேசிய கரு பழனியப்பனின் பேச்சுக்கு மக்களிடம் அப்ளாஸ் அள்ளியது.  மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி என்று சொன்னாலே மக்கள் சிரிக்கிறார்கள். தமிழக முதல்வர் பதவி இப்படி சிரிப்பாய் சிரிப்பது இதுவே முதல்முறை என்று கூறி நக்கலடிக்க அங்கிருந்தவரகளும் சிரித்துவிட்டனர்.