Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவின் ஒரு கோடி பரிசு போஸ்டர்: திட்டி விட்ட சீமான்!!

பாஜகவின் ஒரு கோடி பரிசு போஸ்டர்: திட்டி விட்ட சீமான்!!
, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:48 IST)
பாஜகவினர் ஒட்டிய ஒரு கோடி ரூபாய் பரிசு போஸ்டரை விமர்சித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். 
 
கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
 
கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் பாஜகவினர் நூதனமான போஸ்டர் ஒன்றை ஒட்டினர். அதில் இந்திய குடியுரிமை சட்டத்தால் யாரவது ஒருவர் பாதிப்படைந்ததாக நிரூபித்தால் கூட ஒரு கோடி ரூபாய் தர தயார் என வெளிப்படையாக சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலானது. 
 
இதனிடையே இப்போது இது குறித்து பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, போஸ்டர் ஒட்டியவர்தான் முதலில் பாதிப்படைவார். சிஏஏ சட்டத்தினால் ஆபத்து என்னவென்று தெரிந்தனால்தான் விழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வாக்களித்து வெற்றி பெற வைத்த நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது மட்டும்தான் ஆட்சியாளர்களின் கடைமையே தவிர. அதை விடுத்து நாட்டின் குடிமகனா என்று கேள்வி கேட்பது கிடையாது என சாடியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாள் இரவில் உலக பிரபலம்! – உலகை திரும்பி பார்க்க செய்த சிறுவன்!