பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்,இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளர்.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த நடத்தைத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளைத் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது