Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முறை அறிவிப்பு

, சனி, 26 ஜூன் 2021 (16:18 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன.

இந்நிலையில், தமிழகத்தில்  12 ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20 மற்றும் அகமதிப்பீடு 10 என மொத்தம் 30 க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் 10 பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களாக மாற்றப்பட்டு  முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
12ஆம் வகுப்பில் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துகொள்ளப்படும்.  
கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ. தேர்வு எழுதாத நிலை இருந்திருந்தாலோ அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அகமதிப்பீட்டு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அகமதிப்பீட்டுத் தேர்வு செய்முறைத் தேர் எழுதாத மாணவர்களுக்கு தனித்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்களும் மேற்கூறிய முறையில் கணக்கிடபப்ட்டு உச்சநீதிமன்ரம் ஆணைபப்டி ஜூலை 31 ஆம் தேதிக்குள அர்சுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில்  12 ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20 மற்றும் அகமதிப்பீடு 10 என மொத்தம் 30 க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் 10 பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களாக மாற்றப்பட்டு  முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
12ஆம் வகுப்பில் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துகொள்ளப்படும்.  
கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ. தேர்வு எழுதாத நிலை இருந்திருந்தாலோ அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அகமதிப்பீட்டு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அகமதிப்பீட்டுத் தேர்வு செய்முறைத் தேர் எழுதாத மாணவர்களுக்கு தனித்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்களும் மேற்கூறிய முறையில் கணக்கிடபப்ட்டு உச்சநீதிமன்ரம் ஆணைபப்டி ஜூலை 31 ஆம் தேதிக்குள அர்சுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்கள் வெளியீடு