Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

Advertiesment
தமிழக வெற்றிக் கழகம்

Siva

, செவ்வாய், 1 ஜூலை 2025 (16:10 IST)
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஜூலை 3ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை த.வெ.க. தனது கொடியில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். 
 
இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், "பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், த.வெ.க. கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு, மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டே த.வெ.க. கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
"பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும், த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ள எக்காளம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. த.வெ.க. கொடி தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது; வாக்காளர்களை குழப்பும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கில் நாளை மறுநாள் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!