தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் தைப்பூசம் மிகவும் முக்கியமான திருவிழாவாகும். அந்த நாளில் பக்தர்கள் பலரும் காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களில் ஈடுபடுவர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க தடை விதித்துள்ளது.
அதை தொடர்ந்து 21ம் தேதி பழனியில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. ஆனால் அன்றும் பக்தர்களுக்கு வழிபட அனுமதி கிடையாது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.