Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை கடத்தல் என நம்பி மனநோயாளி அடித்துக்கொலை - தொடரும் சம்பவங்கள்

குழந்தை கடத்தல் என நம்பி மனநோயாளி அடித்துக்கொலை - தொடரும் சம்பவங்கள்
, வியாழன், 10 மே 2018 (08:44 IST)
குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவண்ணாமலையில் சாமி கும்பிடவந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் அடங்கும் முன்பே அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது
 
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள பாலத்தில் ஒரு ஆண் சடலம் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. மேலும், அவரின் கண்களும் அகற்றப்பட்டிருந்தன. அவர் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக் கருதி பொதுமக்கள் அவரை தாக்கி அங்கே தொங்க விட்டு சென்றுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விசாரணையில், அவர் ஒரு மனநோயாளி என்பது, சில நாட்களாக அந்த பகுதியில் அவர் சுற்றி திரிந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
 
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்களின் போராட்டம் எதிரொலி: நெடுவாசல் திட்டத்தை கைவிடுகிறதா ஜெம் நிறுவனம்?