Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனகசபை மீது ஏறி தரிசனம் செய்த பக்தர்கள்! – சிதம்பரம் தீட்சிதர்கள் சர்ச்சைக்கு முடிவு!

Advertiesment
Nataraja Temple Kanagasabai
, புதன், 28 ஜூன் 2023 (09:26 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பதில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.



சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து தீட்சிதர்கள், அறநிலையத்துறை இடையே மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் கனகசபையில் பக்தர்கள் ஏறக்கூடாது என தீட்சிதர்களை வைத்த அறிவிப்பு பலகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

இதனால் நேற்று தீட்சிதர்கள் கனகசபையை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு எழுந்தது. தொடர்ந்து தீட்சிதர்களுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து இன்று முதல் கனகசபையில் ஏற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை பால் நிவேத்ய பூஜை முடிந்த நிலையில் பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜி நல்லா இருக்கணும்.. அப்ப தான் நிறைய பேர் உள்ளே போவாங்க.. ஜெயக்குமார்