சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் பிரபலமானது ஆகும். வேறு மாநிலங்களில் இருந்தும், வேறு நாட்டிலிருந்தும் கூட இந்த கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த சில மாதங்கள் முன்னர் சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் தீட்சிதர்கள் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, பழங்காலம் தொட்டே கனகசபை மீது மக்கள் ஏறி தரிசனம் செய்வது இருந்து வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த அனுமதியை தமிழ்நாடு அரசு அரசாணையாகவும் வெளியிட்டுள்ளது.