சட்டவிரோதமாக கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கிக் கொடுத்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது
இதனடிப்படையில்தான் இன்று ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
இதற்கான ஆதாரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் அவரது வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது