சட்டவிரோதமாக சீனர்களுக்கு விசா பெற உதவி செய்ததாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இந்த முறைகேடு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்றும் சிபிஐ கருத்து தெரிவித்துள்ளது
சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நேற்று சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. சோதனைக்கு பின்னர் சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கில் 263 பேருக்கு விசா காலம் நிறைவு பெற்றதால் அந்த விசாவை நீடிக்க அப்போது அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது
மேலும் இந்த முறைகேட்டுக்கு பா சிதம்பரம் மற்றும் உள்துறைச் செயலாளரின் கவனத்தை மீறி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சீட்டை குறிப்பிட்டுள்ளது