Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிதி நிறுவன மோசடி: கைதான தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் முடக்கம்..!

நிதி நிறுவன மோசடி:  கைதான தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் முடக்கம்..!

Mahendran

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:41 IST)
நிதி நிறுவன வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் என்பவரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகள் பழமையான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்டோர் வைப்பு தொகை வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சுமார் 525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையை இந்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தேவநாதன் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பொருளாதார குற்றப்பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அதன் பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் உள்ள தேவநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தேவநாதன் மற்றும் அவருடைய தொடர்புடைய ஐந்து வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளதாகவும் இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணிகள் எண்ணிக்கை குறைவு: நாகை - இலங்கை கப்பல் சேவையில் மீண்டும் சிக்கல்..!