தேனி மாவட்டம் பொம்மைய கவுண்டன் பரமராஜ் மகன் கேசவன் (36),கருவேலநாயக்கன் பட்டி சின்னையா மகன் சேகர்பாபு (45) இருவரும் சேர்ந்து சென்னை ஆவடி முருகன் மகன் தவச்செல்வம் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.இதனை நம்பி 10 லட்சம் ரூபாய் தவச்செல்வம் கொடுத்கின்றார்.
பின்னர் இவரை தேனி உழவர் சந்தை அருகே காரில் அழைத்து சென்று ஒரிஜினல் 10 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகே இடையில் இறக்கிவிட்டு சென்று விட்டனர் கேசவன் மற்றும் சேகர்பாபு
இதனை தொடர்ந்து தவச்செல்வம், தேனி போலீசாரிம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேசவன் மற்றும் சேகர்பாபு இருவரையும் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடமிருந்து பழைய 2000 ரூபாய் நோட்டுகள் 3 கோடியே 40 லட்சம் ரூபாய், மூன்று கார்கள், 16 செல்போன்கள், ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் 14 லட்சம் ரூபாயை இருவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர்.