Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடித்த காவல் ஆய்வாளர்

Advertiesment
தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடித்த காவல் ஆய்வாளர்
, புதன், 27 ஜனவரி 2021 (23:33 IST)
காவல்துறைக்கு மேலும் ஒரு கிரீடம் சேர்த்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் | 30 ஆண்டுகளாக தட்டிக்கழித்து வந்த வழக்கினை பணியில் சேர்ந்த 3 மாதங்களில் முடித்து ஆயுள் தண்டனையும் பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமாருக்கு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு.
 
இந்திய அளவில் தனது காவல்துறையினை மேலும் கம்பீரப்படுத்தி மேலும் ஒரு கிரீடம் வைக்க உதவிய காவல் ஆய்வாளர் முத்துக்குமார்.
 
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தைச் சேர்ந்தவர் வேலாயுதபெருமாள் (66). இவர் கடந்த 1990 ம் ஆண்டு மே மாதம் அன்று 31 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (20) என்பவரது தங்கை ரபேக்கால் (1990 ம் வருடம் 18 வயது) என்பவரை கிண்டல் செய்ததையடுத்து எனது தங்கையை கிண்டல் செய்தாயா ? என்று கேட்டுள்ளார். அதற்கு சாமுவேலை வேலாயுதபெருமாள் கையில் வைத்திருந்த பேனா கத்தியினை கொண்டு கழுத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் தடுக்கச் சென்ற சாமுவேலின் தாயார் முனியம்மாளை தாக்கியுள்ளார். கோட்டைப்பட்டினம் இக்பால் தெருவில், விளாங்காய் காம்பவுண்ட் அருகில் நடைபெற்ற இந்த குற்றச்சம்பவத்திற்கு இவ்வழக்கு அன்றே தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளி ஆறுமுகப்பெருமாளை தேடி பின்னர் கைது செய்துள்ளனர். பிணையில் வெளி வந்த வேலாயுதபெருமாள் தலைமறைவாகியதோடு, வழக்கிற்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நீதிமன்றம் கடந்த 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி பிடி வாரண்ட்டும் பிறப்பித்துள்ளது., இந்நிலையில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலாயுதபெருமாளை, அந்த காவல்நிலையத்திற்கு கடந்த 2019 ம் ஆண்டு பணியில் சேர்ந்த ந.முத்துக்குமார் பணியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் தலைமறைவான நபரான வேலாயுதபெருமாளை 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி கோட்டைப்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ந.முத்துக்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்த்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணை புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது. 28 வருடங்களாக தலைமறைவாக இருந்தநிலையில் கொலை நடந்து 30 வருடங்கள் கழித்து நடந்து முடிந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிக், குற்றவாளி வேலாயுதபெருமாளுக்கு ஆயுள் தண்டனையும் மூன்றாயிரம் ரூபாய்‌ அபராதமும் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலாயுதபெருமாளை தீவிரமாக மடக்கி பிடித்த காவல்நிலைய ஆய்வாளர் ( தற்போதைய முசிறி காவல்நிலைய ஆய்வாளர் ந.முத்துக்குமார் ) அவர்களின் செயலால் காவல்துறைக்கு மேலும் ஒரு கிரீடம் வைத்த்து போல் உள்ளது என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும், எது எப்படியோ சட்டம் தன் கடமையை செய்யும் என்கின்ற பழமொழியை நிருபித்த அப்போதைய புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளரும், தற்போதைய திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலைய ஆய்வாளருக்கு காவல்துறையிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழைத் தொழிலாளிக்கு அடித்த ரூ.637 கோடி பரிசுத்தொகை !