Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணை முதல்வர் காரின் பின்னால் சென்ற அமைச்சரின் கார் விபத்து.. 60 வயது முதியவர் பலி..!

Advertiesment
Accident

Mahendran

, புதன், 22 ஜனவரி 2025 (15:10 IST)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் பின்னால் சென்ற அமைச்சரின் கார் விபத்துக்குள்ளானதில் 60 வயது முதிர்  பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஜனவரி 16ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது மகனுடன் வந்திருந்தார். பின்னர் அவர் மதுரை விமான  நிலையத்திற்கு காரில் சென்ற போது அவருடைய காருக்கு பின்னால் அமைச்சர்களின் கார்களும் சென்றன.

அதில் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூவீலரில் மோதியதில், டூவீலரில் வந்த ராஜேந்திரன் என்ற 60 வயது முதியவர் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்தனர். விபத்தில் நடந்த கார் அமைச்சர் மூர்த்தி சொந்தமானது என்றாலும் விபத்து ஏற்படுத்திய போது அந்த காரில் அவர் பயணம் செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி! விழிப்புணர்வு ஏற்படுத்த என பேட்டி..!