திருப்பதியில் கூட்ட நெரிசல் காரணமாக ஆறு பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நேற்று காலை, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச டிக்கெட்டை பெறுவதற்காக வரிசைகளில் காத்திருந்த பக்தர்கள் மத்தியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட ஆறு பேர் பலியான நிலையில், தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பலியானோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிதி உதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த சம்பவத்திற்கு பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறுவதாகவும், கோவில் நிர்வாகிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது என்றும், கூட்டத்தை நிர்வாகிப்பதில் உடனடியாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.