Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ஆண்டுக்கால சான்றிதழ் கொண்ட அர்ச்சகர் படிப்பு - விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

3 ஆண்டுக்கால சான்றிதழ் கொண்ட அர்ச்சகர் படிப்பு - விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:22 IST)
ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

 
அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 
 
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயதுக்குள் உள்ள குரல் வளம், உடல் வளம் உடையவர்கள், சமய தீட்சை பெற்றவர்கள், சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரி பெண்ணிடம் நூதனமாக 13 லட்சம் திருடிய நைஜீரியர்கள்!