Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 26 April 2025
webdunia

கோவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்! – சிக்கலை முடித்து வைத்த அறநிலையத்துறை

Advertiesment
Tamilnadu
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:55 IST)
தமிழகத்தில் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் மட்டும் கடந்த ஆண்டை போல கரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கோவில் திருவிழா உள்ளிட்டவற்றை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியையும் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதற்கு இந்து மத அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இதுகுறித்து இந்து முன்னேற்ற கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் விளக்கமளித்துள்ள தமிழக இந்து அறநிலையத்துறை, விநாயகர் சிலைகளை தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்து வழிபடவது, கூட்டம் சேர்வது உள்ளிட்டவற்றிற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல விநாயகர் சிலைகளை கோவில்களில் மட்டும் வைக்கவும், அவற்றை ஆர்பாட்டமன்றி கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது.

அறநிலையத்துறையில் உறுதியை இந்து முன்னேற்ற கழகம் ஏற்ற நிலையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் படம் இல்லாத நல்லாசிரியர் விருது சான்றிதழ்!